தயாசிறி ஜயசேகர எம்பிமீது விசாரணை நடத்த குழு நியமனம்
தயாசிறி ஜயசேகர எம்பிமீது விசாரணை நடத்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி சபா மண்டபத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்தக் குழுவின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான உபாலி பன்னிலகே மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அதன் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

