தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்களை திருப்பி அனுப்பும் பொறுப்பதிகாரி.

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்களை திருப்பி அனுப்பும் பொறுப்பதிகாரி: ஆதாரத்துடன் சிக்கிய சம்பவம்தம்பலகாமம் (2026.06.26)தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களை, அங்குள்ள பொறுப்பதிகாரி அலட்சியமாக திருப்பி அனுப்பும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது

கடந்த 26 அன்று, சிராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் அவசர சிகிச்சைக்காகவும் மருந்து பெற்றுக் கொள்வதற்காகவும் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

எனினும், அங்கு கடமையிலிருந்த வைத்தியசாலை பொறுப்பதிகாரி, அந்தத் தாய்க்கு சிகிச்சையளிக்கவோ அல்லது மருந்துகளை வழங்கவோ மறுத்துள்ளார் இங்கு வர வேண்டாம், முள்ளிப்பொத்தானை வைத்தியசாலைக்குச் செல்லுங்கள் எனக் கூறி, பொறுப்பற்ற முறையில் அவரை திருப்பி அனுப்பியுள்ளார்

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எழுந்த சர்ச்சைஇதேபோன்றதொரு குற்றச்சாட்டு கடந்த வாரம் நடைபெற்ற தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

வைத்தியசாலையின் இந்த முறையற்ற நிர்வாகம் மற்றும் நோயாளர்கள் திருப்பி அனுப்பப்படும் விவகாரம் குறித்து தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் அக்கூட்டத்தின் போது சுட்டிக்காட்டினார்எனினும், அதற்குப் பதிலளித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அருண் ஹேமச்சந்திரா, சும்மா பேசக் கூடாது, ஆதாரத்துடன் வீடியோ மூலமாவது கொண்டு வாருங்கள் என தவிசாளரிடம் தெரிவித்திருந்தார்

பாராளுமன்ற உறுப்பினர் ஆதாரங்களைக் கோரியிருந்த நிலையில், சிராஜ் நகர் தாய்க்கு நேர்ந்த இந்த அநீதியான சம்பவம், தம்பலகாமம் வைத்தியசாலையின் அலட்சியப் போக்கை தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

பொதுமக்கள் விடுக்கும் அவசர கோரிக்கைஇவ்விடயம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாகக் கவனம் செலுத்தி, ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அரசாங்கப் பொது வைத்தியசாலைகளை நம்பி வரும் பாமர மக்களின் கஷ்டங்களை உணர்ந்து, அங்குள்ள வைத்திய பொறுப்பதிகாரிகள் சரியான முறையில் சேவைகளை வழங்க முன்வர வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்படும் அதிகாரிகள் மீது சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை

manel