ஜனாதிபதியுடன் சந்திப்பை அடுத்து கருத்து தெரிவித்த மனோ கணேசன்!

ஜனாதிபதியுடன் சந்திப்பை அடுத்து கருத்து  தெரிவித்த மனோ கணேசன்!


ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரி சந்திரகீர்த்தி, மலையக விவகார இணைப்பாளராக நியமனம்

இந்திய வம்சாவளி மலையக மற்றும் தென்னிலங்கை வாழ் தமிழர் விவகாரங்களை கையாள, ஜனாதிபதி செயலகத்தில் ஒரு உயர் மட்ட இணைப்பதிகாரியை நியமியுங்கள் என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் கோரிக்கையை ஏற்று கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது காரியாலய பிரதம அதிகாரி பிரபாத் சந்திரகீர்த்தீயை, மலையக விவகார இணைப்பாளராக நியமித்தார்.

தித்வா மலையக பேரழிவு, காணி உரிமை, மலையகத்தில் தொடர்மாடி நிராகரிப்பு, 50 இலட்ச வீட்டுரிமை, இந்திய வீடமைப்பு திட்டம், தொழிலாளர் சம்பளம், அரச பொது நிர்வாகத்தில் தமிழர் உள்வாங்கல், தமிழ் பிரதேச செயலக மற்றும் கிராம சேவகர் வலய அதிகரிப்பு, மேலதிக தமிழ் பிரதேச செயலாளர் நியமனம், பொலிஸ் துறையில் தமிழர் உள்வாங்கல், கல்வி-ஆசிரியர் நியமனம், மகாண-வலய தமிழ் கல்வி பணிப்பாளர் மற்றும் தமிழ் அதிபர்கள் நியமனம், கொழும்பு ரோயல், டீஎஸ் சேனநாயக்க, இசிபத்தன, கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் மற்றும் அனுமதி குறைப்பு, மாகாண சபை தேர்தல், ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இன்று பேச்சுகள் ஜனாதிபதிக்கும், கூட்டணி தூதுக்குழுவூக்கும் இடையில் நிகழ்ந்தன.

தாம் பிரதிநிதித்துவம் மக்கள் எதிர்கொள்ளும் விவகாரங்கள் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, இணைப்பாளருடன் உரையாடி உடன்பாடுகளை எட்ட வேண்டும். அந்த உடன்பாடுகளை துறை சார் அமைச்சர்கள் மூலம் நிறைவேற்றி தர ஜனாதிபதி உடன்பாடு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில், மனோ கணேசனுடன், எம்பீக்கள் பழனி திகாம்பரம், வே, இராதாகிருஷ்ணன், மற்றும் தமுகூ அரசியல் குழு உறுப்பினர்கள் பரணிதரன், பாரத் அருள்சாமி, நகுலேஸ்வரன், விஜயசந்திரன், சசில்குமார், விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.

manel