ஜனாதிபதியின் பிறந்த நாளையொட்டி விசேட பூஜை வழிபாடுகள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பிறந்தநாளையொட்டி கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான KT குருசாமி பழ புஷ்பநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (24/11) விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.
கொழும்பு மாவட்ட தேசிய மக்கள் கட்சி அமைப்பாளர் சிவானந்த ராஜா உள்ளிட்ட ஆலய பரிபால சபையினர், இன்னும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.







