சுரேஷ் சலே நீதிமன்றில் முன்னிலை
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

