சிறுவர்கள் உலகை எதிர்கொள்ள தன்னம்பிக்கையை வழங்குவோம்

களங்கப்படுத்தப்படாமல் உதவியை நாடவும், வன்முறையின்றி வளரவும் கூடிய சூழல்களை உருவாக்குவதில் பெற்றோர், ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள், சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் இந்தப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்கின்றன. 

இந்த உலக சிறுவர் தினத்தில், எமது சிறுவர்களின் கருத்துகள், உணர்வுகள் மற்றும் அனுபவங்கள் முக்கியமானவை என்பதை உணர்ந்து, அவர்களின் கருத்துகளை நாம் மேலும் கவனமாகச் செவிமடுப்போம்.

அவர்களுக்கு கல்வியையும் வாய்ப்புகளையும் மாத்திரமன்றி, வேகமாக மாறிவரும் உலகை எதிர்கொள்வதற்குத் தேவையான பாதுகாப்பு, புரிந்துணர்வு மற்றும் தன்னம்பிக்கையையும் வழங்குவோம். எமது சிறுவர்களின் மனங்களை வலுப்படுத்தும்போது, எமது நாட்டின் எதிர்காலத்தையும் வலுப்படுத்துகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

manel