சப்ரகமு பல்கலைக்கழக வளாகத்தில் மலர் வளையங்கள்…!
சப்ரகமு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மலர் வளையங்கள் வைத்து மாணவர்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
உபவேந்தர் காரியாலயம், சுகாதார பிரிவு மற்றும் உணவகம் இன்னும் பல இடங்களில் மலர் வளையங்கள் வைத்து எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இந்த விடயம் குறித்து சப்ரகமு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கையில்.சப்ரகமு பல்கலைக்கழக சுகாதார பிரிவில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்;
சப்ரகமு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மலர் வளையங்கள் வைத்து மாணவர்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.உபவேந்தர் காரியாலயம், சுகாதார பிரிவு மற்றும் உணவகம் இன்னும் பல இடங்களில் மலர் வளையங்கள் வைத்து எதிர்ப்பினை தெரிவித்தனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தொடரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டும்.கடந்த 17 ஆம் திகதி சப்ரகமு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாக 7 பேர் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டனர்.
காலாவதியான தடுப்பூசியை வழங்கியதால் இந்த 7 மாணவர்களும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர், இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து நிரந்தர தீர்வை கோரி இவ்வாறு மலர் வளையங்கள் வைத்து. தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

