கைவிடப்பட்ட கைக்குண்டு மீட்பு
மட்டக்களப்பு வாகனேரி கொழும்பு வீதியின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை வாழைச்சேனை பொலிஸார் இன்று (26) மாலை மீட்டுள்ளனர்.
அரச புலனாய்வுத் துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது .
இது கடந்த காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பினரால் கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த வாரம் வடமுனை வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் இதே போன்றதொரு மேலும் ஒரு கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டது.

