கடலலையில் சிக்கி உயிரிழந்த பெண்கள் நால்வரின் உடல்கள் மீட்பு

கடலலையில் சிக்கி உயிரிழந்த பெண்கள் நால்வரின் உடல்கள் மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கின 

கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்ற பெண்களும் அலையில் சிக்கி பலியானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. 

கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவி ஷாலினி, தேவகி செல்வம், பவானி, காயத்திரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த கல்லூரி மாணவி 17 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை தொடர்ந்து, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ். ரஜீவன்