ஐதேகவுடன் இணைந்து பணியாற்றத் தயார்
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு ஒப்புக்கொண்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று (09) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில்,
இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும் முன்னர் நடந்த இரு நிர்வாகக் குழு கூட்டங்களிலும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவின் மூலம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு பொதுவான வேலைத்திட்டம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

