எரிபொருளை பதுக்கிய மூவர் கைது

எரிபொருளை பதுக்கிய மூவர் கைது

நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (26) நீர்கொழும்பு, புதுக்குடியிருப்பு மற்றும் ஹிங்குராக்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

நீர்கொழும்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, மீன்பிடி படகு ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 1050 லீற்றர் டீசலை வைத்திருந்த 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேநேரம் நேற்று மாலை புதுக்குடியிருப்பு பொலிஸார் சுதந்திரபுரம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில், அனுமதிப்பத்திரமின்றி 562 லீற்றர் டீசலை வைத்திருந்த 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

ஹிங்குராக்கொட பொலிஸார் யாய 07 பகுதியில் மேற்கொண்ட மற்றொரு சோதனையின் போது, அனுமதிப்பத்திரமின்றி 1995 லீற்றர் மண்ணெண்ணெயைச் சேமித்து வைத்திருந்த 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவங்கள் தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

manel