உலக சந்தையில் தொடர்ந்து அதிகரிப்பை பதிவு செய்யும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
உலக சந்தையில் தொடர்ந்தும், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.
அதற்கமைய இன்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 5,278 டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன், வெள்ளியின் விலையும் அதிகரித்து, 93.72 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலை 1.94 சதவீதத்தால் அதிகரிப்பை பதிவு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

