இலங்கையில் மோசமடையும் காற்றின் தரம்!

இலங்கையில் மோசமடையும் காற்றின் தரம்!

நாட்டில் காற்றின் தரம் அண்மைய நாட்களான மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.  

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக்குறியீடு 150 முதல் 200 வரை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

எல்லை கடந்த காற்று இயக்கம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டுகளிலும் இந்த காலகட்டத்தில் இதேபோன்ற நிலைமை காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்நிலை காரணமாக சுவாசப்பிரச்சினையை எதிர்கொள்வோர், உடல்நல பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அவசியம் ஏற்படுமாயின் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

manel