இலங்கை – இந்திய மீனவ பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அவசியம் – சஜித்

இலங்கை – இந்திய மீனவ பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அவசியம் – சஜித்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக மீனவர் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், அதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘இந்து-இலங்கை இருதரப்பு உறவுகள்’ என்ற தலைப்பில் ANI சேவையுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்தக் கருத்தை வெளியிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகளின் கடற் சட்டம் பற்றிய சாசனம் நடைமுறையில் உள்ளது என்றும், அதற்கு உட்பட்டு சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் மதித்து இரு தரப்பினரும் ஒன்றிணைந்து உரிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கு இணங்க பிரச்சினைகளைத் தீர்க்க இரு நாடுகளும் உறுதியளிப்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எஸ். ரஜீவன்