இந்தியாவில் பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு
இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் இன்று (03) காலையில் பேருந்து மீது டிப்பர் லொறி மோதிய விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை மோட்டர் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லொறி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

