இந்தியக் கடற்கரையில் இலங்கையர் கைது

இந்தியக் கடற்கரையில் இலங்கையர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில் வைத்து இந்தியக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நபர் ஒருவர் இராமேஸ்வரம் பகுதியில் மறைந்திருப்பதாக இராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகி அவர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவுப் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். 

அப்போது பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் சந்தேகத்திற்கிடமான முறையில் அமர்ந்திருந்த ஒருவரைக் கைது செய்து சோதனையிட்டபோது, அவரிடம் இலங்கைப் பணம், இலங்கை கடவுச்சீட்டு மற்றும் இலங்கை அரச அடையாள அட்டை ஆகியவை இருப்பது தெரியவந்தது. 

இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த கண்ணன் என்ற 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

எஸ். ரஜீவன்