இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களை வெளியேற்றினார் டூச்செல்

இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களை வெளியேற்றினார் டூச்செல்

உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணிவீரர்களின் பெயரை பயிற்சியளர் தாமஸ் டூச்செலின் அறிவிதுள்ளார். இங்கிலாந்து அணியில் முகிய வீரர்களான ஃபில் ஃபோடன் , கோல் பால்மர் ,

ரியல் மாட்ரிட் தற்காப்பு வீரர் டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்ட், மான்செஸ்டர் யுனைடெட் இரட்டையர்களான ஹாரி மகுவேர் , லூக் ஷா ஆகியோரை டூச்செல் சேர்க்காததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா , மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலக்க்கிண்ணப் போட்டிக்குச் செல்லப்போவதில்லை என்பதை மகுவேர் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார். அணியில் சேர்க்கப்படாதது தனக்கு “அதிர்ச்சியையும் பெரும் ஏமாற்றத்தையும்” அளிப்பதாக அவர் கூறினார். மேலும் பல பிரீமியர் லீக் நட்சத்திரங்கள் நீக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தபோது, இங்கிலாந்து ரசிகர்களிடையே மேலும் அதிர்ச்சி அலைகள் எழுந்தன.

“அணியைத் தேர்ந்தெடுப்பது ஒரு கடினமான செயல்முறையாக இருந்தது, ஆனால் இந்த வீரர் குழுவின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டூச்செல் கூறினார். அவர்கள் அனைவரும் தங்களுக்குரிய இடத்திற்குத் தகுதியானவர்கள். அணியும், அணியுடன் தொடர்புடைய அனைவரும் நாட்டைப் பெருமைப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றார்.

இங்கிலாந்தின் முன்னணி வீரர்களான ஹாரி கேன், ஜூட் பெல்லிங்ஹாம், புகாயோ சாகா , டெக்லான் ரைஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

யூரோ 2024 போட்டிக்குப் பிறகு சவுதி லீக்கிற்கு மாறியதிலிருந்து தனது நாட்டிற்காக ஒரே ஒரு முறை மட்டுமே விளையாடியுள்ள இவான் டோனியின் சேர்க்கை ஒரு ஆச்சரியமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துளனர்.

மான்செஸ்டர் யுனைடெட் நடுக்கள வீரர் கோபி மைனூவும், சீசனின் இரண்டாம் பாதியில் தாமதமாக சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசனல் அணியின் பிரீமியர் லீக் பட்டத்தை வென்ற எபெரெச்சி ஈஸ் , நோனி மதுயெகே ஆகியோர் தங்களது முதல் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட உள்ளனர். யூரோ 2024-லிருந்து நீக்கப்பட்ட மார்கஸ் ராஷ்ஃபோர்ட், இந்த சீசனில் பார்சிலோனாவில் தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்த பிறகு மற்றொரு பெரிய சர்வதேசப் போட்டிக்குச் செல்கிறார்.

2024-ல் இங்கிலாந்தின் சிறந்த இளம் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், கடந்த ஆண்டு செல்சி அணி கிளப் உலகக் கிண்ணத்தை வெல்ல உத்வேகம் அளித்தவருமான பால்மர், நாட்டின் மிகச் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்பட்டார். ஃபோடனைப் போலவே, அவரும் இந்த சீசனில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தத் திணறி வருகிறார். மேலும், கிளப் மற்றும் நாட்டிற்காக விளையாடிய தனது கடைசி 14 போட்டிகளில் அவர் கோல் அடிக்கவில்லை.

இங்கிலாந்து உலகக் கிண்ண அணி:

கோல்கீப்பர்கள்: டீன் ஹென்டர்சன், ஜோர்டான் பிக்க்போர்டு, ஜேம்ஸ் டிராஃபோர்டு

தடுப்பாட்ட வீரர்கள்: டான் பர்ன், மார்க் குஹி, ரீஸ் ஜேம்ஸ், எஸ்ரி கோன்சா, டினோ லிவ்ராமென்டோ, நிக்கோ ஓ’ரெய்லி, ஜாரெல் குவான்சா, ஜெட் ஸ்பென்ஸ், ஜான் ஸ்டோன்ஸ்

நடுப்பகுதி வீரர்கள்: எலியட் ஆண்டர்சன், ஜூட் பெல்லிங்ஹாம், எபெரெச்சி ஈஸ், ஜோர்டான் ஹென்டர்சன், கோபி மைனூ, டெக்லான் ரைஸ், மோர்கன் ரோஜர்ஸ்

முன்கள வீரர்கள்: அந்தோனி கார்டன், ஹாரி கேன், நோனி மதுயெகே, மார்கஸ் ராஷ்போர்டு, புகாயோ சாகா, இவான் டோனி, ஆலி வாட்கின்ஸ்

manel