அக்குறணையில் கோர விபத்து 4 பேர் பலி!

அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் சிமென்ட் கலவை வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மற்றும் வீதியில் சென்றவர்கள் மீதும் மோதியதில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் மேலும் பலர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

