ProFood ProPack & AgBiz’ உணவுத் துறைகண்காட்சி ஓகஸ்ட் 21 – 23: BMICH இல்

ProFood ProPack & AgBiz’ உணவுத் துறைகண்காட்சி ஓகஸ்ட் 21 – 23: BMICH இல்

‘ProFood ProPack & AgBiz’ உணவுத் துறை
கண்காட்சி ஓகஸ்ட் 21 – 23: BMICH இல்

  • அமைச்சர் ஹந்துன்னெத்தியினால் ஆரம்பித்து வைப்பு

உணவு பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் விவசாயத் துறை தொடர்பான இலங்கையின் முதன்மையான கண்காட்சியான ‘ProFood ProPack & AgBiz 2026’, ஓகஸ்ட் 21 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.

இலங்கை உணவு பதப்படுத்தல், பொதியிடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அடங்கிய இக்கண்காட்சியானது, கைத்தொழில் மற்றும் அமைச்சர் தொழில்முயற்சியாண்மை மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர ஆகியோரின் தலைமையில் இன்று (21) ஆரம்பமானது.

இக்கண்காட்சியானது அறிவுப் பகிர்வு, புத்தாக்கம் மற்றும் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான இத்துறையிலுள்ள தலைவர்கள், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் நுகர்வோரை ஒன்றிணைக்கிறது.

இலங்கை உணவு பதப்படுத்துவோர் சங்கம் (Sri Lanka Food Processors Association – SLFPA) ஆனது, தொழில்முறை கண்காட்சி ஏற்பாட்டாளரான Lanka Exhibition & Conference Services (Pvt) Ltd நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த 3 நாள் கண்காட்சியில் 30,000 இற்கும் மேற்பட்ட வணிக மற்றும் நுகர்வோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு, 6 கண்காட்சி மண்டபங்களில் 450 இற்கும் மேற்பட்ட கண்காட்சி கூடங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் சீனா, இந்தியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 இற்கும் மேற்பட்ட சர்வதேச கண்காட்சியாளர்களும் பங்கேற்பாளர்களும் கலந்துகொள்ளவுள்ளமை பிராந்தியத்தின் முன்னணி தொழில் துறைத் தளங்களில் ஒன்றாக இதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.

நுகர்வோர் – வணிகம் (B2C) மற்றும் வணிகம் – வணிகம் இடையிலான (B2B) பங்கேற்பாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘ProFood ProPack & AgBiz 2026’, பொதியிடல் நிபுணர்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், உணவு பதப்படுத்துவோர், விநியோகஸ்தர்கள், தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து, தொடர்புகளை ஏற்படுத்தவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், வணிக வளர்ச்சிக்குமான மதிப்புமிக்க வாய்ப்புகளை உருவாக்கும்.

இங்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள ‘Knowledge Hub’ (அறிவு மையம்) பகுதியை பார்வையாளர்கள் அணுகி தகவல்களை பெற முடியும். இங்கு பல்வேறு வழிகாட்டல்களை வழங்கப்படும்.

இம்முறை பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல ஈர்க்கக்கூடிய விளையாட்டு போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

manel