ரயிலில் மோதி தப்பிப்பிழைத்த லொறிச் சாரதி
ரயிலில் மோதி தப்பிப்பிழைத்த லொறிச் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அஹங்கம, கபலானா ரயில் கடவையில், இன்று காலை மருதானையில் இருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரயிலில் லொரி ஒன்று மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் லொரியின் சாரதி ஆவார், அவர் படுகாயங்களுக்கு இலக்கான நிலையில் கராபிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதிய நேரத்தில் லொரியில் இருந்து குதித்ததால் சாரதி பெரிய காயம் ஏதுமின்றி உயிர் தப்பியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

