பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை எதிர்வரும் 09ம் திகதி பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிப்படுத்தும் என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்தஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் வேதன அதிகரிப்பு தொடர்பான நிலைப்பாட்டை எதிர்வரும் 09ம் திகதி பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிப்படுத்த உள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்தஜயசிங்க தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (1) ஹட்டன் தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பாக பலகலந்துரையாடலை நாம் மேற்கொண்டிருக்கின்றோம்,
எமது அமைச்சும் பெருந்தோட்ட நிறுவனங்களும் இனைந்து நீண்ட நேர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம், எவ்வாறு இந்த வேதனத்தை அதிகரிப்பது தொடர்பாக தற்போது 1350 ருபாய் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது.
மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோவிற்கு 50ருபாய் வழங்கப்படுகிறது.
அடுத்த கலந்துரையாடலை அடுத்த மாதம் 09ம் திகதி நடாத்த உள்ளோம் . ஒரு மாத காலத்திற்குள் அவர்களுடைய நிலைப்பா்டை அறிவிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளோம்.
நாங்கள் எவருக்கும் பணிப்புரை வழங்குவதில்லை கடந்த காலங்களை எடுத்து கொண்டால் தோட்டபுறங்களில் அதிகமான வருமானம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
வருமானத்தை அதிகரிக்க முடியாவிட்டால் அது யாருடைய பிழை?
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு,மலையக பெருந்தோட்ட பகுதிகளில் குறைவாக காணப்பட்டாலும் இந்த பகுதிகளிலும் போதை பொருள் காணப்படுகிறது.
நுவரெலியாவிலும் ஜஸ் போதைபொருள் தயாரிப்பதற்கான பொருட்கள் கொண்டுவரப்பட்டது இதற்கு முன்பு வெளிநாடுகளில் போதை பொருளை தயார் செய்து எமது நாட்டுக்கு கொண்டு வந்தனர்.
தற்போது நமது நாட்டிலும் இந்த போதை பொருள் தயாரிக்கப்படுகிறது கடந்த கால ஆட்சியளர்கள் இருந்திருந்தால் எமது நாட்டில் ஜஸ்போதை பொருளை நாடு முழுவதும் நிரப்பியிருப்பார்கள்.
தற்போது பெருமளவிலான போதை பொருட்களை இனங்கண்டு கைப்பற்றினார், தொடர்ந்து கைப்பற்றி வருகிறோம்.
நாங்கள் உங்களுக்கு வாக்குறுத வழங்குகிறோம் போதைபொருள் அற்ற நாடாக இந்த நாட்டை நாம் மாற்றியமைப்போம்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கும் போதை பொருள் வியாபாரிகளுக்கிடையில் தொடர்புகள் பேணப்பட்டு வந்தது.
ஆகவே அரசியல்வாதிகள் தான் போதை பொருளை விற்பனை செய்யும் முகவர்கள் நாட்டில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் சிறந்த நாட்டை உறுவாக்கி கொடுக்க வேண்டும்.
இதற்காக எமது நாட்டின் ஜனாதிபதி முதல் அனைவரும் ஒன்று கூடி செயற்பட்டு வருகிறோம் என குறிப்பிட்டார்.

