பொலிஸ் தினத்தை முன்னிட்டு சிரமதான பணி முன்னெடுப்பு!

பொலிஸ் தினத்தை முன்னிட்டு சிரமதான பணி முன்னெடுப்பு!

159வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சமாதானம் மற்றும் பாதுகாப்பையும் வழங்கும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசகமுவ ஓயாவினை சுத்தப்படுத்தும் பணி 03.09.2025.புதன்கிழமை பொகவந்தலாவ ராணிகாடு தோட்டப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவான் மதுசங்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சிரமதான பணியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி.ஹட்டன் பொலிஸ் வலையத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர மற்றும் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் லொய்னோன் தழிழ் வித்தியாலய மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை லொய்னோன் தோட்ட சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொகவந்தலாவ இராணிகாடு தோட்டத்தில் இருந்து ஆரம்பிக்கின்ற குறித்த நீரினை கொழும்பு பகுதிகளில் வாழுகின்ற மக்கள் பாவனைக்கு பயன்படுத்துகின்றனர் ஆகவே இந்த 159வது பொலிஸ் தினத்தன்று இன்று இந்த நீரினை சுத்தம் செய்யும் பணி முன்னெடுகாகபாபட்டமை குறிப்பிடத்தக்கது 

manel