இன்றைய வானிலை

இன்றைய வானிலை

வட மத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் குருணாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது.

இந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என இன்றைய வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

manel