போதைப்பொருள் குற்றங்களில் 122,913 பேர் கைது
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 122,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 9 இலட்சத்து 28 ஆயிரத்து 787 கிலோ ஹெராயின், 13 இலட்சத்து 96 ஆயிரத்து 709 கிலோ ஐஸ், ஒரு கோடியே 11 இலட்சத்து 92 ஆயிரத்து 823 கிலோ கஞ்சா, 27 ஆயிரத்து 836 கிலோ கொக்கெய்ன் மற்றும் 3 இலட்சத்து 81 ஆயிரத்து 428 கிலோ ஹஷிஷ் ஆகியவை காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, 25,111 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்காக காவல்துறை அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 6,600 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

