தெஹிவளை துப்பாக்கிதாரி கொல்லப்பட்டார்
தெஹிவளையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் ஈடுபட்டவர் என கூறப்படுபவர், சிறப்பு அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“பஸ் அசித” என்பவர் மீது தாக்குதல் நடத்திய குறித்த துப்பாக்கிதாரி, கஹதுடுவவில் சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

