நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களுக்கும் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாகக் கடற்பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

