ரஷ்யாவில் மீண்டும் நில அதிர்வு

ரஷ்யாவில் மீண்டும் நில அதிர்வு

ரஷ்யாவில் மீண்டும் 6.4 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. 

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் மற்றும் ஹவாய் தீவுகளுக்கு அருகில் உள்ள பசுபிக் கடற்பகுதியில், அண்மையிலும் மூன்று சக்திவாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டன. 

அதன் பின்னர், சில பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, பின் அந்த எச்சரிக்கை மீளப்பெறப்பட்டது. 

இந்தநிலையில், கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வுகள் பதிவாகி உள்ளதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில், மீண்டும் 5.3 மற்றும் 4.5 என்ற மெக்னிடியூட் அளவுகோலில் இரு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 

இன்று மொத்தமாக 3 முறை நில அதிர்வு பதிவாகி உள்ளதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியுள்ளது.

manel