ஜனாதிபதி அனுரவின் அறிவிப்பு
சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தால் வழங்கப்படும் உதவிகள், மக்களின் முக்கிய தேவைகளை அடையாளம் கண்டு, அதனைப் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதுடன் (Sultan A. Al-Marshad) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்வதும், புதிய திட்டங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதனையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

