பொது சேவையை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவு
நிலையான பொது சேவையை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (13) காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோது அசுசா குபோடா இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பயனுள்ள பொது சேவைகளை வழங்குவதற்கும், பணியாளர் பயிற்சிக்காக ஐக்கிய நாடுகஅபிவிருத்தித் திட்டத்திடமிருந்து மேலதிக ஆதரவைப் பெறுவதற்கும், அனைத்து அரச நிறுவனங்களிலும் உள் விவகார அலகுகளை (IAUs) நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

