படகு கவிழ்ந்து விபத்து
நெடுந்தீவு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தென்னிலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற, தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று, நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவானுக்கு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகில் ஏற்பட்ட இயந்திர பிரச்சினை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன்போது, படகிலிருந்த பணியாளர்கள் இருவர் உட்பட 14 பேர் உயிராபத்து எதுவும் இன்றி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

