அதிரடியாக களமிறங்கிய பிரதி அமைச்சர்
2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் பலாங்கொடை மாரதென்ன பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிரீன் கோல்ட்(Green gold) வீட்டு திட்டத்தின் 31 வீடுகளின் தற்போதைய நிலைமை ……
நேற்றைய தினம்( 10) அவ் வீட்டு திட்டத்தினை பார்வையிடுவதற்காக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்பகுமார,பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர்கள்
சிவநேசன் ,
வசந்தமூர்த்தி, இம்புல்பே பிரதேச சபை உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர்கள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கடந்த 9 வருட காலமாக சில வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலும் சில வீடுகள் முழுமை பெறாத நிலையிலும் ஒரு சில வீடுகளின் சுவர்கள் மாத்திரம் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டன. சில வீடுகள் 90% நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் கூட அவற்றின் தரம் பற்றிய கேள்விகள் பல எழுந்துள்ளன. அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் கூட இன்னும் செய்து கொடுக்கப்படாத ஒரு துரதிஷ்டமான அவல நிலை எனவும்
நிர்மாண பணிகளின் போது பல குளறுபடிகள் இடம் பெற்றிருந்தமை எமக்கு அவதானிக்க கூடியதாக உள்ளது என பிரதி அமைச்சர் சுட்டி காட்டியிருந்த அதே வேலை
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்வீட்டு திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருந்தாலும் கூட அது போதுமானதாக இல்லை எனவும் இத்திட்டத்தின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசேட கவனம் செலுத்துவதோடு அமைச்சின் அதிகாரிகளோடு கலந்தாலோசித்து
நிர்மாணப் பணிகளை முழுமையாக முன்னெடுத்து செல்வதற்கு மேலும் 15 மில்லியன் ரூபாய் நிதியினை பெற்று கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

