200 உள்ளூராட்ச்சி மன்றங்கள் திசைக்காட்டிக்கு
பலாங்கொடை நகர சபை மற்றும் தனமல்வில பிரதேச சபையைக் கையகப்படுத்தியதன் மூலம், நேரடியாகக் கைப்பற்றப்பட்ட 151 நிறுவனங்கள் உட்பட 200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி கொண்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி வைத்திருக்கும் மொத்த உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 27 ஆகும்.
இதேபோல், இலங்கை தமிழரசுக் கட்சி 17 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா 3 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைப் பெற்றுள்ளதுடன், இலங்கை பொதுஜன ஐக்கிய முன்னணி ஒரு உள்ளூராட்சி மன்றத்தைக் கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையில், சுயேச்சை குழுக்கள் உட்பட பல கட்சிகள் 12 உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.

