கதிர்காமம் வரும் பக்தர்களுக்காக குமண நுழைவாயில் திறப்பு
கதிர்காமக் கந்தனை வழிபட பாதயாத்திரையில் வரும் வடக்கு மற்றும் கிழக்கு பக்தர்களின் நலன் கருதி இன்று யால வனப்பூங்காவின் கிழக்கு நுழைவாயிலான குமண நுழைவாயில் திறக்கப்படவுள்ளது.
இன்று தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பக்தர்களின் நலன் கருதி இந்தப் பாதை திறக்கப்படும் என்று யால வனப்பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

