பிரத்தானியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர்
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட நிமல் சேனாதீர தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.
இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான இவர், அரச சேவையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றியுள்ளார்.
அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இரண்டு முதுகலை பட்டங்களையும் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

