மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பாரிய வேலைத் திட்டம்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் அட்டன் கல்வி வலயத்துக்கான சுமார் 8 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த வேலைத் திட்டம் நாளை (25) ஞாயிற்றுக்கிழமை மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி பிரதான மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஊடக இணைப்பாளர் கே. கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றாதின் திட்டமிடல் முகாமையாளர் சங்கர் சுரேஷ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு கல்லூரி அதிபர் என். பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஏ. சிவஞானம் உட்பட மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்வார்கள். மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க சுமார் 5 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த “போடியம்” உட்படமுழுமையான ஒலிபெருக்கி உபகரணத் தொகுதியும், சாமிமலை கிங்கோரா தமிழ் வித்தியாலயத்துக்கு 2 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த போட்டோ பிரதி இயந்திரத் தொகுதியும், சாமிமலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு ஓரு லட்சம் ரூபாய் செலவில் பழுதபார்க்கப்பட்ட வகுப்பறை தளபாட உபகரணங்களும் கையளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

