கடலுக்கு நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலமாக மீட்பு
நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (13) செவ்வாய்க்கிழமை இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



அதனை, தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆகியோரின் உதவியோடு சடலம் மீட்கப்ட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடவமாக மீட்கப்பட்டவர்களில் மூவர் பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் வயது 17,ஸ்ரீகாந்த் சரன்ராஜ் வயது 19, ஸ்ரீகாந்த் அஜித்குமார் வயது 18 யூசுப் வயது 27வென்னப்புவ போலஸ்வத்த என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவர்களுல் ஸ்ரீகாந்த் சரன்ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித்குமார் ஆகியோர் குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும், உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவிருப்பதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
