சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்
முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முறையான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு மேலும் 17 தன்சல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் நாடு முழுவதும் பல இடங்களில் தன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மேலும் அனைத்து தன்சல்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்பார்வையிடப்பட்டன.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இன்றைய தினம் நடைபெறும் தன்சல்கள் தொடர்பிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

