பேருந்து விபத்தில் 21பேர் பலி, மேலும் பலரின் நிலை கவலைக்கிடம்
நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 500அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக கொத்மலை பொலிஷார் தெரிவித்தனர்.




இந்த விபத்து சம்பவத்தில் 21 பேர் உயிர்ழந்துள்ளதாகவும் 58பேர் காயமடைந்துள்ளதோடு மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குருநாகல் பகுதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை விபத்து இடம்பெற்ற கொத்மலை கெரண்டிஎல்ல பகுதிக்கு நுவரெலியா, நாவலபிட்டி, கம்பளை, ஆகிய வைத்தியசாலைகளில் இருந்து தலா இரண்டு அம்புலன்ஷ் வண்டிகள் வீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் அதிகமனோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்குண்டவர்களை மீட்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஷார் தெரிவிக்கின்றனர் குறித்த விபத்து தொடர்பாக ஆராய்வதற்கு விஷேட குழுவொன்று கொத்மலை கெரண்டிஎல்ல பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பேருந்தின் சாரதி படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அமைச்சின் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்ட்டுள்ளதாக போக்குரத்து நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குனசேன தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

