மாதம்பையில் மண்சரிவு, நேரில் வந்த பிரதி அமைச்சர்

மாதம்பையில் மண்சரிவு, நேரில் வந்த பிரதி அமைச்சர்

இரத்தினபுரி மாதம்பை தோட்டத்தில் தொடர் குடியிருப்புகளின் தரைப்பகுதி திடீரென தாழ்ந்தது மாத்திரமல்லாமல் சிறு மண்சரிவு அனர்த்தமும் ஏற்பட்டிருந்தது.

இதனையறிந்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொடகவெல பிரதேச சபையின் தலைமை வேட்பாளர் குளரத்ன அவர்களும், கொடகவல பிரதேச செயலகத்தின் செயலாளர், மாதம்பை தோட்ட அதிகாரி, கிராம உத்தியோகத்தர், சமூர்தி அதிகாரி மற்றும் குறித்த அமைச்சின் PCCF உத்தியோகத்தர் என பல்வேறு தரப்பினர் குறித்த இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டு பிரச்சினை தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டது.

பின்னர் மக்களோடு கலந்துரையாடிய பிரதி அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 24 வீடுகளை அமைப்பதற்கான தோட்ட காணிகளை விடுவிப்பதற்கு உரிய அதிகாரிகளுக்கு கட்டளையை வழங்கியதோடு இப்பிரச்சினைக்குத் தீர்வு இன்றைய தினத்தில் எட்டப்பட்டிருந்து.

பிரதி அமைச்சரின் விரைவான செயற்பாட்டை பொதுமக்கள் பாராட்டியதுடன் இதுபோன்ற அசௌகரியமான நிலைமைகளில் தங்களைப் போன்றவர்களின் வருகையினையும் தீர்வினையும் எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

இரத்தினபுரி -: ரகுமான்

manel