பெல் 212 ரக விமானம் விபத்து
பெல் 212 ரக விமானம் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானம் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பயணித்த சிலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

