உதைபந்தாட்ட போட்டியில் சன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகம் வெற்றி
நுவரெலியா மார்காஸ் தோட்டம் மேற்பிரிவு பிரண்ட்ஸ் விளையாட்டு கழகத்தால் 17வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு ஏழு பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 19, 20 ஆம் திகதிகளில் மார்காஸ் தோட்ட மேற்பிரிவு பொது மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி தொடரில் 16 அணிகள் பங்குப்பற்றளுடன் நொகவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் இஸ்கிராப் தோட்டத்தை சேர்ந்த சன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகமும் மார்காஸ் தோட்ட மேற்பிரிவு தோட்டத்தை சேர்ந்த பிரண்ட்ஸ் விளையாட்டு கழகமும் பல பரீட்சை நடத்தியது.




இதில் வழங்கப்பட்ட நேரத்தில் இரண்டு அணிகளும் கோள் எதுவும் போடாத நிலையில் தண்ட உதை மூலமாக போட்டி தீர்மானிக்கப்பட்டது.
இதில் மூன்றுக்கு ஒன்று 3.1 என்ற கோல் அடிப்படையில் சன் பேர்ட்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. வெற்றி பெற்ற அணிக்கு கிண்ணமும் 40 ஆயிரம் பண பரிசும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட அணிக்கு கிண்ணமும் 20000 ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது.சிறந்த கோல் காப்பாளராக சன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகத்தின் எம் பவித்ரன் மற்றும் சிறந்த விளையாட்டு வீரராக பிரன்ஸ் விளையாட்டு கழகத்தின் அருள் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.




