உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கொபெயிகனே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (16) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொபெயிகனே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

manel