புத்தாண்டு காலப்பகுதியில் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
புது வருடப் பிறப்புடன் இலங்கை முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுவது வழக்கம்,
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துகளில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
பட்டாசு தொடர்பான விபத்து ஒன்றில் காயமடைந்த ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புது வருடப் பிறப்பின்போது பல்வேறு செயற்பாடுகளின்போது திடீர் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இத்தகைய விபத்துக்களைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்துகின்றனர்.
பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பாக அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இத்தகைய விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

