பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் சித்திரைப் புதுவருட வாழ்த்துச் செய்தி

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் சித்திரைப் புதுவருட வாழ்த்துச் செய்தி

நம் இலங்கையின் இரு பிரதான சமூகங்களாகிய சிங்கள, தமிழ் மக்களின் வருடப்பிறப்பானது ஒரே நாளில் நிகழ்வது மிக மகிழ்ச்சிக்குரியதே, இவ்விரு சமூகங்களினதும் மொழி,மதம்,கலை,கலாசாரம், பாரம்பரியம்,பண்பாடு அனைத்தும் வருடந்தோறும் நீண்ட காலமாக பேணிப் பாதுகாக்கப்பட்டு அவை இத்தகைய வருடப் பிறப்பின் போது மீள நினைவு கூறப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்லப்படுவது அத்தியாவசியம் ஆகும்.

வாழ்வில் பெரும் மகிழ்ச்சி தரும் இப் பண்டிகையை சிங்கள தமிழ் சமூகங்கள் “இலங்கையர்” என்ற அடிப்படையில் எவ்வாறு ஒன்றுபட்டு ஒற்றுமையாக கொண்டாடுகின்றனரோ-அதே போல கடந்த பல தசாப்தங்களாக புரையோடிப் போயிருந்த சமூக வேற்றுமைகளையும், இனவாதத்தையும் கலைந்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வில் ஒன்றிணைந்து வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் கட்டியெழுப்ப திடசங்கற்பம் கொள்வோம்.

தேசிய மக்கள் சக்தி நாட்டில் இனவாதத்தை அடியோடு கலைத்தெறிய பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்தோடு இந்நாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மலர்ந்த பின் மலரும் முதலாவது வருடப் பிறப்பு இதுவாகும்.

“விசுவாவசு”வருடப் பிறப்பு என அழைக்கப்படும் இம்மகிழ்ச்சிகரமான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரையும் வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

manel