மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி

மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி

பெல்மடுல்ல, புலத்வெல்கொட பகுதியில் நேற்று (08) மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் புட்டுஹபுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

கட்டிடம் ஒன்றின் பின்புறத்தில் சுவர் ஒன்றை அமைப்பதற்காக வந்திருந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் மீதே இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தில் காயமடைந்த நபர் கட்டிடத்தின் உரிமையாளர் எனவும் காயமடைந்த நபர் தற்போது கஹவத்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

manel