நுவரெலிய மாவட்டத்தில் மக்களுடன் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!

நுவரெலிய மாவட்டத்தில் மக்களுடன்  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!

எதிர் வரும் மே மாதம் இடம்பெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டங்களுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,

இம்முறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன் வைத்த வரவு செலவு திட்டத்தின் போது என்றும் இல்லாத அளவு அதிகமாக நிதி ஒதுக்கப் பட்டுள்ளதோடு இவ் ஒதுக்கீட்டின் மூலம் மலையக மக்களுக்கான அபிவிருத்தி திட்டத்தினை எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இல்லாது உரிய நேர காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்ட பிரதி அமைச்சர் அவர்கள்,

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் பலர் ஆட்சி பீடம் ஏறியிருந்தாலூம் கூட இன்று வரை எமது மக்களின் அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

நீர் வளங்கள் அதிகமாக காணப்பட்டாலும் இன்றும் கூட ஒரு சில பிரதேசங்களில் குடிநீர் வசதிகள் இன்றி அவதிப்படுகின்றார்கள்.இதற்கு பிரதான காரணம் சிறந்த தலைமைத்துவம்.

மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை செய்யக்கூடிய மனப்பாங்கு அதனை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல ஒருவருக்கு தேவையான அடிப்பை அறிவு இன்மையேயாகும் , ஆனால் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்மானது அதிகமான படித்த பட்டதாரி இளைஞர், யுவதிகள் ஆசிரியர்களை களமிறக்கியுள்ளதோடு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இம்முறை அதிகமான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதோடு விசேடமாக மலையகத்தில் அதிகமானோர் வெற்றி பெறுவார்கள் எனகுறிப்பிட்டிருந்தார்.

இவ் விசேட கூட்டத்தின் பின்னர் ரம்பொடை வெதமுல்ல பிரதேசத்திலே இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் நிர்மாணிக்கப்பட்ட மலையக மக்களுக்கான வீட்டு திட்டங்கள்முழுமை பெறாமல் காணப்படுகின்ற நிலையினை அவதானித்த பிரதி அமைச்சர் அவர்கள், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் மூலம் அவற்றை கட்டி முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் , தொடர்ந்து ரம்பொடை கலாசார மத்திய நிலையத்தினை பார்வையிட்டதுடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து புதிய திட்டங்களை முன் வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

நாட்டின் தற்போது இன, மத, மொழி பேதமற்ற நல்லதொரு ஆட்சி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற அதே வேளை மலையக மக்களாகிய நாங்கள் அனைவரும் எமது எதிர்கால நலனை கருத்திற் கொண்டு தற்போது எமது நாடு ஓர் ஊழலற்ற ஆட்சியின் மூலம் சுபீட்சமான பாதையினை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் எமது பிரதேசங்கள், கிராமங்களின் அபிருத்தியை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல கிடைககப்பெறுகின்ற நிதியினை ஊழல் மோசடிகள் செய்யாத நல்ல பிரஜைகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தெரிவு செய்து ஜனாதிபதியின் கரங்களை மேலும் பலப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

manel