பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு

எதிர்வரும் சித்திரை புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்தப்படும் நோக்கில், சுமார் 6,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருடன் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரும் (STF) பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இராணுவம் வீதித் தடுப்புப் பணிகளிலும் பொலிஸார் சிவில் உடையில் பாதுகாப்புப் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

manel