மண்சரிவு அபாயத்தால் ஐந்து குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

மண்சரிவு அபாயத்தால் ஐந்து குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

பலாங்கொடை ராசகல பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு அபாயத்தால் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான தமது உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதேசத்தில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண் சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள இடத்தில் இருந்து கீழ் பகுதியில் வாழும் மக்களே இவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தொடரும் சீரற்ற காலநிலை மாற்றம் காரணமாக பலாங்கொடை ராசகல ஹெரமிட்டிகல வீதியில் பாரிய அளவில் மண் மேடு சரிந்து விழுந்ததில்குறித்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.

குறித்த மண் மேடு அகற்றப்பட பிறகு மீண்டும் ஒரு மண் மேடு சரிந்து விழுந்ததில் மீண்டும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

manel