ரெப் இசை பாடகர் துப்பாக்கியுடன் கைது!
ஷான் புத்தா எனப்படும் இலங்கையின் பிரபல ரெப் பாடகர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மீகொடை அரலிய உயன பகுதியில் வைத்து 9 மில்லி மீட்டர் துப்பாக்கியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவருக்கு துப்பாக்கி வழங்கியதாக கூறப்படும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் பாடகரின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் மாத்தறை கொட்டவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது திருடப்பட்டு பாடகருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

