தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் உறுதி
தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும்சம்பள நிர்ணய சபையுடனான கடந்தகால பேச்சுவார்த்தைகளைப் போலன்றி, தற்போது அது தொடர்பாக முறையான இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும் எனவும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமர்வின்போது, வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

